நீட் ஆள்மாறாட்டம் செய்த புகாருக்கு ஆளான மாணவர் உதித் சூர்யா குடும்பத்துடன் கைது
சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்ததாக எழுந்த விவகாரம் கடந்த ஒரு வாரமாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  வருகிறது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு  உள்ளது. இந்தநிலையில் மாணவர் உதித்சூர்யா, தனக்கு முன் ஜாமீன் வழங்கும்படி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி  ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று பகல் 12 மணி அளவில் விசாரணைக்கு வந்தது. முடிவில் இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. எனவே மனுதாரர் இந்த வார கடைசியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன்பு சரண் அடையலாம். அவ்வாறு சரண் அடைந்தால், இந்த முன்ஜாமீன் மனுவை, ஜாமீன் மனுவாக மாற்றி அடுத்த வாரம் விசாரிக்கப்பட்டு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார். பின்னர் நீதிபதி, இந்த வழக்கை வருகிற 1-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்நிலையில், நீட் ஆள்மாறாட்டம் செய்த புகாருக்கு ஆளான மாணவர் உதித் சூர்யா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் திருப்பதி மலையடிவாரத்தில் உதித் சூர்யாவை கைது செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேனி அழைத்துச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் தேனி  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது.

Popular posts
தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கி “திரை துறையை சேர்ந்த 10 லட்சம் குடும்பங்களை காப்பாற்றுங்கள்”
Image
கள்ளக்குறிச்சி மாவட்டம் BDO நிர்வாகத்தை கண்டித்தும் பிச்சை எடுக்கும் போராட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்
Image
ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளால் பக்க விளைவு - மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை
Image
எச்.ஐ.வி.க்கு தடுப்பூசி உருவாக்கும் முயற்சியின் விளைவாக உருவானதுதான் கொரோனா - பிரான்ஸ் விஞ்ஞானி தகவல்
Image
உடல்நிலை சரியில்லாத மனைவியை கும்பகோணத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு சைக்கிளிலேயே அழைத்துச் சென்ற கணவர்
Image