கடந்த 3 ஆண்டுகளில் 7 ஆயிரத்து 512 குழந்தைகளை, ரெயில்வே போலீசார் மீட்டுள்ளனர் - டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி

ரெயில்வே போலீசாருக்கும், ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கும் ஒருநாள் குழந்தை கடத்தல் தடுப்பு குறித்த பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது.

 

சென்னையில் உள்ள தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் குழந்தைகள் உதவி மையம் சார்பில் ரெயில்வே போலீசாருக்கும், ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கும் ஒருநாள் குழந்தை கடத்தல் தடுப்பு குறித்த பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்புக்கு ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி பி.எம்.நாயர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தமிழக ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:- உலகில் இந்தியாவில் தான் அதிக குழந்தைகள் உள்ளனர். ஒரு வருடத்தில் காணாமல் போகும் 1,500 குழந்தைகளில் 40 பேர் என்ன ஆகின்றனர் என்பதே தெரியவில்லை. ரெயில் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பது அங்கு வரும் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பாக உணர வைக்கிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு போலீசார் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் மிக பாதுகாப்பாக உணர்கின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளாக தமிழக ரெயில்வே போலீசார் 7 ஆயிரத்து 512 குழந்தைகளை மீட்டுள்ளனர். இதில் 699 பேர் பெண் குழந்தைகள் ஆகும். தற்போது 'உதயம்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு மூலம் ரெயில் நிலையங்களில் உள்ள ரெயில்வே ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என அனைவருமே குழந்தைகளை தடுக்க செயல்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. பிரேந்திரகுமார், கமிஷனர் சந்தோஷ் என்.சந்திரன், ரெயில்வே போலீஸ் ஐ.ஜி. வனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.











Popular posts
தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கி “திரை துறையை சேர்ந்த 10 லட்சம் குடும்பங்களை காப்பாற்றுங்கள்”
Image
கள்ளக்குறிச்சி மாவட்டம் BDO நிர்வாகத்தை கண்டித்தும் பிச்சை எடுக்கும் போராட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்
Image
ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளால் பக்க விளைவு - மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை
Image
எச்.ஐ.வி.க்கு தடுப்பூசி உருவாக்கும் முயற்சியின் விளைவாக உருவானதுதான் கொரோனா - பிரான்ஸ் விஞ்ஞானி தகவல்
Image
உடல்நிலை சரியில்லாத மனைவியை கும்பகோணத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு சைக்கிளிலேயே அழைத்துச் சென்ற கணவர்
Image