வில்லிவாக்கத்தில் துணிகரம்,ஒரே இரவில் 7 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை:

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் 9ஆவது தெருவில் சிந்தாமணி ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வரும் அருண் என்பவர் தினமும் காலையில் கடையை திறப்பது வழக்கம். அந்த வகையில், இன்றும் காலை வழக்கம் போல் கடையை திறக்க அருண் வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, கல்லா பெட்டியில் இருந்த ரூ.1000 கொள்ளை போனது தெரியவந்துள்ளது.

கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்த இளைஞருக்கு அரிவாள் வெட்டு

இதேபோன்று அருகில் உள்ள பெரியசாமி என்பவரது மளிகை கடை மற்றும் சிட்கோ நகர் 2ஆவது மெயின் ரோட்டில் உள்ள வெற்றி அடகு கடைகளின் பூட்டையும் உடைத்து கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதே தெருவில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடையில் பூட்டை உடைத்து ரூ.5000 ரொக்கப்பணம் மற்றும் உரிமையாளரின் ஏடிஎம் கார்டு பான் கார்டு போன்றவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

அன்று தியானம், இன்று மயக்கம்..! நிர்மலா தேவிக்கு நடப்பது என்ன?

அதன் அருகிலுள்ள சங்கர் ஸ்டோர் எனும் கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த சர்க்கரை மூட்டையை கொள்ளையர்கள் தூக்கிச் சென்றுள்ளனர். இதேபோன்று இரண்டாவது மெயின் ரோட்டில் உள்ள ஒரு மளிகை கடை, டூவீலர் மெக்கானிக் ஷாப்களில் கொள்ளையடிக்கும் முயற்சியில் கொள்ளையர்கள் பூட்டை உடைத்துள்ளனர். ஒரே இரவில் அப்பகுதியில் உள்ள 7 கடைகளின் பூட்டை உடைத்து அரங்கேறி உள்ள துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Popular posts
தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கி “திரை துறையை சேர்ந்த 10 லட்சம் குடும்பங்களை காப்பாற்றுங்கள்”
Image
கள்ளக்குறிச்சி மாவட்டம் BDO நிர்வாகத்தை கண்டித்தும் பிச்சை எடுக்கும் போராட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்
Image
ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளால் பக்க விளைவு - மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை
Image
எச்.ஐ.வி.க்கு தடுப்பூசி உருவாக்கும் முயற்சியின் விளைவாக உருவானதுதான் கொரோனா - பிரான்ஸ் விஞ்ஞானி தகவல்
Image
உடல்நிலை சரியில்லாத மனைவியை கும்பகோணத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு சைக்கிளிலேயே அழைத்துச் சென்ற கணவர்
Image