வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை,
பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
"காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டும். காவல் துறை அனுமதி பெற்று ஒலி பெருக்கி பயன்படுத்த வேண்டும். பொது மற்றும் தனியார் சுவர்களில் பிரச்சார விளம்பரம் செய்யத் தடை செய்யப்பட்டுள்ளது. தனியாரிடம் அனுமதி பெற்று இருந்தாலும் சுவர் விளம்பரம் செய்யக் கூடாது” போன்ற கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.