கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற இரவும் பகலும் மனிதநேயத்தோடு உழைத்துக் கொண்டிருக்கின்ற அனைத்து துறையையும் சார்ந்த நல்ல உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வீட்டில் இருக்கும் இந்த நாட்களை சரியாக பயன்படுத்திக்கொள்ள ஒரு ஆலோசனை தோன்றியது. ஆர்வம் இருப்பவர்கள் ஒன்றிணைவோம். கடந்த 20 ஆண்டுகளாக சமூக தளத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறேன் ஆனால்
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எழுதிய புத்தகத்தை ஒருமுறைகூட முழுவதுமாய் முறையாய் படிக்கவில்லை என்று குற்ற உணர்வு என்னைக் கொன்று கொண்டிருக்கிறது. அடுத்தகட்ட வேலையை ஆரம்பிப்பதற்கு முன்பாக இந்த இடைவெளியை பயன்படுத்தி பாபாசாகிப் அம்பேத்கர் எழுதிய அனைத்து நூல்களையும் படிப்பதற்கு ஒரு சிறிய ஆலோசனை. தமிழில் 37 நூல்களும் ஆங்கிலத்தில் 21 நூல்களும் உள்ளன.
37 நூல்களையும் 37 நபர்கள் பிரித்துக் கொள்ளலாம். அவர் அவர்கள் வீட்டில் இருந்தே படிக்கலாம். ஏப்ரல் 14 க்கு பிறகு டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபத்தில் ஒன்றுசேர்ந்து ஒவ்வொருவராக அவர்கள் படித்த புத்தகத்தை பகிர்ந்து கொள்ளுவோம். அவ்வாறு செய்யும்போது நாம் அனைவரும் டாக்டர் அம்பேத்கர் எழுதிய அனைத்து நூல்களைப் பற்றியும் தெரிந்து இருப்போம். அதன்பிறகு தேவைப்பட்ட தலைப்பை ஒரு முறை இரு முறை நாம் படித்து ஆழமாக தெரிந்து கொள்ளலாம். இதுதான் இந்த ஆண்டு டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு நாம் கொடுக்கும் பிறந்தநாள் பரிசு.
தொலைநோக்கு பார்வை கொண்ட அவர் எழுதிய புத்தகங்கள் பல இந்தியாவில் நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக இருக்கும். இறுதியாக டாக்டர் அம்பேத்கர் எழுதிய புத்தமும் அவர் தம்மமும் என்ற புத்தகம் உலக பிரச்சனைக்கும் தீர்வு சொல்லக்கூடியது. அப்படிப்பட்ட மாமனிதர் நம் அறியாமையால் இன்று சேரி தலைவராக மாற்றப்பட்டு விட்டார். அவரை ஆழமாய் படித்து அனைத்து சாதி சகோதர சகோதரிகளுக்கும் டாக்டர் அம்பேத்கரின் கருத்துக்களை கொண்டு சேர்க்க வேண்டியது நம் பொறுப்பு.
நான் வாழும் இந்த வாழ்க்கை டாக்டர் அம்பேத்கர் எனக்கு கொடுத்த பிச்சை. அவர் மட்டும் இல்லை என்றால் ஏதோ ஒரு இடத்தில் நான் துப்புரவு பணியாளராக இருந்திருக்க வேண்டும். என்னைப் போல உங்களுக்கும் தோன்றியிருந்தால்
டாக்டர் அம்பேத்கர் புத்தகங்களை படிக்க ஆர்வம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும். 7904648872.
வரலாற்றை மறந்தவர்கள் வரலாறு படைக்க முடியாது.
அன்புடன்
ஷெரின்