கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் பலி

ன்னியாகுமரி அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது இரத்த பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஏற்கெனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், மூன்றாவது உயிரிழப்பாக 66 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை உயிரிழந்தார்.உயிரிழந்தவர் ராஜாக்கமங்கலம் துறை கிராமத்தைச் சேர்ந்தவர்.

அவர் கேரளாவில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவந்துள்ளார். அவர் அங்கிருந்து திரும்பிய பின்னர் தான் காய்ச்சல், இருமல் ஏற்பட்டதை அடுத்து கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு வரைஸ் தொற்று இருப்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ரத்தம் மற்றும் சளி பரிசோனை முடிவுகள் வந்த பிறகே அவரது இறப்புக்கான காரணம் தெரிய வரும் என மருத்துவர்கள் கூறினர்.


Popular posts
தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கி “திரை துறையை சேர்ந்த 10 லட்சம் குடும்பங்களை காப்பாற்றுங்கள்”
Image
கள்ளக்குறிச்சி மாவட்டம் BDO நிர்வாகத்தை கண்டித்தும் பிச்சை எடுக்கும் போராட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்
Image
ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளால் பக்க விளைவு - மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை
Image
எச்.ஐ.வி.க்கு தடுப்பூசி உருவாக்கும் முயற்சியின் விளைவாக உருவானதுதான் கொரோனா - பிரான்ஸ் விஞ்ஞானி தகவல்
Image
உடல்நிலை சரியில்லாத மனைவியை கும்பகோணத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு சைக்கிளிலேயே அழைத்துச் சென்ற கணவர்
Image