பசிக் கொடுமையால் அவசர எண்ணுக்கு அழைத்த இளைஞர்கள்; இரக்கம் காட்டிய போலீசார்

புதுடில்லி: பசிக்கொடுமையில் சிக்கிய இரு இளைஞர்கள், அவசர உதவி எண்ணுக்கு அழைத்து தங்கள் நிலைமையை விளக்க, அவர்களுக்கு உணவு வாங்கி தந்த போலீசார், பணம் மற்றும் அரிசி, பருப்பு வாங்கி தந்த நெஞ்சை கலங்க வைக்கும் சம்பவம் டில்லியில் நடந்துள்ளது.

சீனாவின் வூஹானிலிருந்து பரவிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ், இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும் 199 நாடுகளுக்கு பரவி உள்ளது. உலகளவில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் உயிரை இந்த வைரஸ் பறித்துள்ளது. 6 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கொரோனா பரவாமல் தடுக்க அவசர அவசரமாக, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வேலையில்லாமல் கூலித்தொழிலாளிகள் பலரும் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் டில்லியில் கூலித்தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்த பிரசாந்த், தில்சாத் என்ற இரு இளைஞர்கள், ஊரடங்கு உத்தரவால் வேலையில்லாமல் போக, வீட்டில் உணவுக்கு தவித்துள்ளனர். 4 நாட்களாக பசியால் வாடிய அவர்கள், டில்லி போலீசாரின் அவசர உதவி எண்ணுக்கு அழைத்து தங்கள் நிலைமையை விளக்கி உள்ளனர். அவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று விசாரித்து, உண்மை நிலையை அறிந்து கொண்ட போலீசார், அவர்களுக்கு மனமுவந்து உதவி செய்துள்ளனர்.


Popular posts
தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கி “திரை துறையை சேர்ந்த 10 லட்சம் குடும்பங்களை காப்பாற்றுங்கள்”
Image
கள்ளக்குறிச்சி மாவட்டம் BDO நிர்வாகத்தை கண்டித்தும் பிச்சை எடுக்கும் போராட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்
Image
ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளால் பக்க விளைவு - மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை
Image
எச்.ஐ.வி.க்கு தடுப்பூசி உருவாக்கும் முயற்சியின் விளைவாக உருவானதுதான் கொரோனா - பிரான்ஸ் விஞ்ஞானி தகவல்
Image
உடல்நிலை சரியில்லாத மனைவியை கும்பகோணத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு சைக்கிளிலேயே அழைத்துச் சென்ற கணவர்
Image