குத்துச்சண்டை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

லகம் முழுவதும் கொரோனா வைரசால் 30 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். சுமார் 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.


துருக்கி நாட்டைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது. இருவரும் லண்டனில் நடந்த ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் பங்கேற்றவர்கள்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஐரோப்பிய தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டிகள் சமீபத்தில் லண்டனில் நடைபெற்றது. 3 நாட்களுக்குப் பிறகு இந்தப் போட்டி நிறுத்தப்பட்டது. இந்த போட்டியில் கலந்து கொண்டு விட்டு துருக்கி திரும்பிய போதுதான் 2 வீரர்களை இந்த வைரஸ் தாக்கியுள்ளது.

இதேப் போல தலைமை பயிற்சியாளருக்கும் இந்த நோய் தொற்று ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் ( ஐ.ஓ.சி.)மீது விமர்சனம் எழுந்தது. மருத்துவ எச்சரிக்கையை புறக்கணித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக் தகுதி சுற்றில் பங்கேற்ற மேலும் 3 குத்துசண்டை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதியாகி உள்ளது. இவர்கள் குரோசியா நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இதுவரை 6 பேர் பாதிக்கப்பட்டதால் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் லண்டன் குத்துச்சண்டை போட்டி அமைப்பாளரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

Popular posts
தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கி “திரை துறையை சேர்ந்த 10 லட்சம் குடும்பங்களை காப்பாற்றுங்கள்”
Image
கள்ளக்குறிச்சி மாவட்டம் BDO நிர்வாகத்தை கண்டித்தும் பிச்சை எடுக்கும் போராட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்
Image
ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளால் பக்க விளைவு - மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை
Image
எச்.ஐ.வி.க்கு தடுப்பூசி உருவாக்கும் முயற்சியின் விளைவாக உருவானதுதான் கொரோனா - பிரான்ஸ் விஞ்ஞானி தகவல்
Image
உடல்நிலை சரியில்லாத மனைவியை கும்பகோணத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு சைக்கிளிலேயே அழைத்துச் சென்ற கணவர்
Image