ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு:

ப்ரல் 14 ஆம் தேதி ஊரடங்கு காலம் முடிவடையும் போது நாட்டில் உள்ள கொரோனா வைரஸ் நிலைமை குறித்து ஆய்வு செய்த பின்னரே கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி ரமேஷ் போக்ரியால்  தெரிவித்தார்.




 

நாட்டில் 21 நாள் ஊரடங்கு ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஊரடங்கு நீட்டிக்கப்படாது என்று அரசாங்கத்திடம் இருந்து அறிகுறிகள் வந்துள்ளன.




 

இது குறித்துன்மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

 

ஏப்ரல் 14 க்கு அப்பால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டால் மாணவர்களுக்கு கல்வி இழப்பு ஏற்படாது என்பதை உறுதிபடுத்த அரசு தயாராக உள்ளது.

 

மாணவர்களின் பாதுகாப்பு, ஆசிரியர்கள் பாதுகாப்பு அரசாங்கத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஊரடங்கு நீக்கப்பட்டவுடன் நிலுவையில் உள்ள தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டை நடத்துவதற்கு ஒரு திட்டம் தயாராக உள்ளது என கூறினார்.


Popular posts
தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கி “திரை துறையை சேர்ந்த 10 லட்சம் குடும்பங்களை காப்பாற்றுங்கள்”
Image
கள்ளக்குறிச்சி மாவட்டம் BDO நிர்வாகத்தை கண்டித்தும் பிச்சை எடுக்கும் போராட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்
Image
ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளால் பக்க விளைவு - மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை
Image
எச்.ஐ.வி.க்கு தடுப்பூசி உருவாக்கும் முயற்சியின் விளைவாக உருவானதுதான் கொரோனா - பிரான்ஸ் விஞ்ஞானி தகவல்
Image
உடல்நிலை சரியில்லாத மனைவியை கும்பகோணத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு சைக்கிளிலேயே அழைத்துச் சென்ற கணவர்
Image