பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைப்பு
சென்னை:

மிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் 2-ந்தேதி தொடங்கி, 24ம் தேதி நிறைவடைந்தது. தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த நாட்களில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. மத்திய மாநில அரசுகள் சார்பில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. 

 

இதற்கிடையே, பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 31-ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. ஏப்ரல் 7-ந்தேதி விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கும் என்று தேர்வுத்துறை தெரிவித்திருந்தது.



ஆனால், ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் ஏப்ரல் 7-ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணிகளை தொடங்க முடியாத நிலை உள்ளது. எனவே விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறி உள்ளது.


Popular posts
தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கி “திரை துறையை சேர்ந்த 10 லட்சம் குடும்பங்களை காப்பாற்றுங்கள்”
Image
கள்ளக்குறிச்சி மாவட்டம் BDO நிர்வாகத்தை கண்டித்தும் பிச்சை எடுக்கும் போராட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்
Image
ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளால் பக்க விளைவு - மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை
Image
எச்.ஐ.வி.க்கு தடுப்பூசி உருவாக்கும் முயற்சியின் விளைவாக உருவானதுதான் கொரோனா - பிரான்ஸ் விஞ்ஞானி தகவல்
Image
உடல்நிலை சரியில்லாத மனைவியை கும்பகோணத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு சைக்கிளிலேயே அழைத்துச் சென்ற கணவர்
Image