ரயில் பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றம்: தமிழகத்தில் சென்னை, திருச்சியில் 273 பெட்டிகள் மாறுகின்றன


சென்னை: நாடு முழுவதும் ரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாறும் பணி தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் சென்னை மற்றும் திருச்சியில் மொத்தம் 273 ரயில் பெட்டிகள் கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றை 2 மாடல்களில் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சீனாவின் வுகான் நகரில் கொரோனா வேகமாக பரவியபோது, அங்கு தற்காலிக மருத்துவமனைகளை சீனா அவசர அவசரமாக கட்டியது. இந்தியாவில் தற்போது கொரோனா வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா தனிமைப்படுத்தல் சிகிச்சைக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அரசு அலுவலக கட்டிடங்கள், தனியார் கல்லூரி கட்டிடங்கள் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொன்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ரயில்கள் இயங்காத நிலையில் இந்த ரயில் பெட்டிகளையே வார்டுகளாக மாற்றும் நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை தாம்பரத்தில் உள்ள ரயில்வே பனிமலை 5 பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. அடுக்கை வசதி, கொசு வலை, நவீன கழிப்பிடம் உள்ளிட்ட அமைப்புகளுடன் பெட்டிகளை மாற்றி அமைக்கும் பணி 4 நாட்களில் நிறைவு பெரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Popular posts
தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கி “திரை துறையை சேர்ந்த 10 லட்சம் குடும்பங்களை காப்பாற்றுங்கள்”
Image
கள்ளக்குறிச்சி மாவட்டம் BDO நிர்வாகத்தை கண்டித்தும் பிச்சை எடுக்கும் போராட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்
Image
ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளால் பக்க விளைவு - மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை
Image
எச்.ஐ.வி.க்கு தடுப்பூசி உருவாக்கும் முயற்சியின் விளைவாக உருவானதுதான் கொரோனா - பிரான்ஸ் விஞ்ஞானி தகவல்
Image
உடல்நிலை சரியில்லாத மனைவியை கும்பகோணத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு சைக்கிளிலேயே அழைத்துச் சென்ற கணவர்
Image