காலை 6 முதல் 12 மணி வரை பள்ளி, கல்லூரி மைதானங்களில் காய்கறி சந்தைகள் செயல்படும்
பொதுமக்கள் ஒரே பகுதியில் கூடுவதை தவிர்த்து சமூக இடைவெளியை கடை பிடிக்கும் வகையில் மாட்டுத்தாவணி, கீழமாரட் வீதி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த சில்லரை விற்பனை காய்கறி கடைகள் தற்காலிகமாக 14 இடங்களில் மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் இந்த கடைகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாலும், பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதாலும் அந்த சாலையோர கடைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் இனி இந்த கடைகள் அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரி மைதானங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்படுகிறது.




மண்டலம் வாரியாக ஒதுக்கப்பட்ட இடங்கள் விவரம் வருமாறு:-




 

மண்டலம்-1

 

கூடல் நகர் புனித அந்தோணியார் பள்ளி, ஆனையூர் அரசு உயர்நிலைப்பள்ளி, தனபால் பள்ளிக்கூடம், ராஜாஜி நடுநிலைப்பள்ளி, தத்தனேரி மகா பள்ளி, திரு.வி.க.பள்ளி, வெள்ளி வீதியார், கேப்ரன்ஹால் பள்ளி, புனித பிரிட்டோ பள்ளி, சிவகாசி நாடார் பள்ளி, மதுரை மாநகராட்சி சேதுபதி பாண்டித்துரை பள்ளி, எல்லீஸ் நகர் ஆக்கி மைதானம், ஸ்ரீவித்யாலயா பள்ளி, பிள்ளைமார் சங்கம் பள்ளி, புனித லூகா பள்ளி, கோச்சடை ஜான் பள்ளி, விளாங்குடி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.

 

மண்டலம்-2

 

யாதவா பெண்கள் கல்லூரி, இ.பி.ஜி. பள்ளி, உத்தங்குடி ஊராட்சி பள்ளி, பஸ்கோஸ் பள்ளி, ராஜாபிரபா கல்யாண மண்டபம், சாத்தமங்கலம் மாநகராட்சி பள்ளி, வக்புவாரிய கல்லூரி, இளங்கோ மேல்நிலைப்பள்ளி, சாய்ராம் பள்ளி, அமெரிக்கன் கல்லூரி, டான்போஸ்கோ ஐ.டி.ஐ. மைதானம், உழவன் உணவகம்.

 

மண்டலம்-3

 

மீனாட்சி கல்லூரி மைதானம், பெரிய பாலம் மாநகராட்சி பள்ளி, முனிச்சாலை மாநகராட்சி பள்ளி, தெப்பக்குளம் வடக்கு பகுதி, தூய மரியன்னை பெண்கள் பள்ளி.

 

மண்டலம்-4

 

தியாகராஜர் பள்ளி, மேலவாசல் ஆரம்பப்பள்ளி, யூ.சி.பள்ளி, சேதுபதி மேல்நிலைப்பள்ளி, வீரமா முனிவர் பள்ளி, கஸ்தூரிபாய் காந்தி மேல்நிலைப்பள்ளி, ஈ.வெ.ரா.பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதுரை கல்லூரி மைதானம், ஜெய்ஹிந்த்புரம் சேதுராஜன் பத்மா திருமண மண்டபம், முத்துப்பட்டி மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, டி.வி.எஸ்.லட்சுமி பள்ளி, பசுமலை சி.எஸ்.ஐ. மைதானம், திருப்பரங்குன்றம் அரசு பெண்கள் பள்ளி, திருநகர் சுவாமி விவேகானந்தா பள்ளி மைதானம், பைக்காரா மாநகராட்சி ஆரம்ப பள்ளி.

 

இந்த கடைகள் காலை 6 மணி முதல் 12 மணி வரை செயல்படும். எனவே பொதுமக்கள் ஒரே பகுதியில் கூட்டம் கூடுவதை தவிர்த்து அந்தந்த பகுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களில் சமூக இடைவெளியினை கடைபிடித்து பொருட்களை வாங்கி செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Popular posts
தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கி “திரை துறையை சேர்ந்த 10 லட்சம் குடும்பங்களை காப்பாற்றுங்கள்”
Image
கள்ளக்குறிச்சி மாவட்டம் BDO நிர்வாகத்தை கண்டித்தும் பிச்சை எடுக்கும் போராட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்
Image
ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளால் பக்க விளைவு - மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை
Image
எச்.ஐ.வி.க்கு தடுப்பூசி உருவாக்கும் முயற்சியின் விளைவாக உருவானதுதான் கொரோனா - பிரான்ஸ் விஞ்ஞானி தகவல்
Image
உடல்நிலை சரியில்லாத மனைவியை கும்பகோணத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு சைக்கிளிலேயே அழைத்துச் சென்ற கணவர்
Image