அருந்ததியர் இளைஞர் பாண்டியன் படுகொலை

144 தடையை மீறி தமிழகத்தில் தொடரும் வன்னியர்களின் சாதி வெறியாட்டம்!


 


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் அத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அருந்ததியர் இளைஞன் பாண்டியனை படுகொலை செய்யும் நோக்கத்தோடு, ஜாதிவெறி பிடித்த வன்னியர்கள் கடந்த 30.03.2020 அன்று திட்டமிட்டு வரவழைத்து, உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொடூரமாக கொலை செய்து, பக்கத்தில் உள்ள காட்டில் வீசி உள்ளார்கள். 


 


ஊரில் கட்டப் பஞ்சாயத்தை கூட்டி படுகொலை செய்யப்பட்ட பாண்டியனின் உடலை புதைக்க வேண்டாம், எாித்து விடுங்கள் என்று அந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை மிரட்டி உள்ளார்கள் 


 


144தடை உத்தரவை வன்னியர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பட்டியல் சமூக மக்கள் மீது சாதி வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விடுவது, சேரிகளை சூரையாடுவது, இளைஞர்களை திட்டமிட்டு படுகொலை செய்வதென பட்டியல் சமூக மக்கள் மீதான வன்முறைகளை வன்னியர்கள் திட்டமிட்டு நடத்தி வருகிறார்கள்.


 


வன்னியர்களின் இதுபோன்ற சட்டவிரோதமான செயல்களை அரசும், காவல்துறையும் வேடிக்கை பார்ப்பதை தலித் விடுதலை இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசும் காவல்துறையும் இதுபோன்ற சாதி வேறியாட்டத்தை முடிவுக்கு கொண்டுவர உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தலித் விடுதலை இயக்கம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.


தமிழக அரசு அருந்ததியர் இளைஞர் பாண்டியன் படுகொலையில் நேரடியாக தலையிட்டு,


அருந்ததியர் சமூக இளைஞர் பாண்டியன் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் மீது கொலை மற்றும் 1989ம் ஆண்டு பட்டியல் சாதிகள் / பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் 2015ம் ஆண்டு திருத்தங்கள் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீட்டு நிவாரணமும், உரிய பாதுகாப்பும் வழங்கிட வேண்டும் வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Popular posts
தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கி “திரை துறையை சேர்ந்த 10 லட்சம் குடும்பங்களை காப்பாற்றுங்கள்”
Image
கள்ளக்குறிச்சி மாவட்டம் BDO நிர்வாகத்தை கண்டித்தும் பிச்சை எடுக்கும் போராட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்
Image
ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளால் பக்க விளைவு - மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை
Image
எச்.ஐ.வி.க்கு தடுப்பூசி உருவாக்கும் முயற்சியின் விளைவாக உருவானதுதான் கொரோனா - பிரான்ஸ் விஞ்ஞானி தகவல்
Image
உடல்நிலை சரியில்லாத மனைவியை கும்பகோணத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு சைக்கிளிலேயே அழைத்துச் சென்ற கணவர்
Image