மானியம் இல்லா சிலிண்டரின் விலை குறைப்பு
ழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சமையல் கியாஸ் சிலிண்டர்களை மத்திய அரசு மானிய விலையில் வழங்கி வருகிறது. அதன்படி ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு தலா 12 கியாஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. அதற்கான மானியம் நுகர்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மேல், சிலிண்டர்கள் தேவைப்பட்டால் சந்தை விலையில் வாங்கிக்கொள்ள வேண்டும். 




 

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து, எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதி, வீட்டு உபயோகம் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர்களின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி 14.2 கிலோ எடையுடைய மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை ரூ.61.5 முதல் ரூ.65 வரை குறைக்கப்பட்டுள்ளது.  இந்தக்கவலை இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து 2-வது மாதமாக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது 




 

குறைக்கப்பட்ட விலையின் படி, டெல்லியில் ரூ.805க்கு விற்பனையாகி வரும் சிலிண்டரின் விலை, ஏப்ரல் 1 முதல் ரூ.744க்கு விற்பனையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையில் ரூ.826-ல் இருந்து ரூ.761.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

Popular posts
தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கி “திரை துறையை சேர்ந்த 10 லட்சம் குடும்பங்களை காப்பாற்றுங்கள்”
Image
கள்ளக்குறிச்சி மாவட்டம் BDO நிர்வாகத்தை கண்டித்தும் பிச்சை எடுக்கும் போராட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்
Image
ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளால் பக்க விளைவு - மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை
Image
எச்.ஐ.வி.க்கு தடுப்பூசி உருவாக்கும் முயற்சியின் விளைவாக உருவானதுதான் கொரோனா - பிரான்ஸ் விஞ்ஞானி தகவல்
Image
உடல்நிலை சரியில்லாத மனைவியை கும்பகோணத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு சைக்கிளிலேயே அழைத்துச் சென்ற கணவர்
Image